உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் பொருட்களை சேதப்படுத்திய யானை

ரேஷன் பொருட்களை சேதப்படுத்திய யானை

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் ரேஷன் கடை ஷட்டரை உடைத்து, உணவு பொருட்களை காட்டு யானை சேதப்படுத்தியது. கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகளை கட்டுப்படுத்த, வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், காட்டு யானைகளின் வரவை முழுமையாக தடுக்க முடியவில்லை. சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை, அங்கிருந்த ரேஷன் கடை ஷட்டரை உடைத்து, அரிசி உட்பட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது. பொதுமக்கள் பட்டாசு வெடித்ததால் அங்கிருந்து மலையடிவாரம் நோக்கி சென்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை