உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு

 ட்ரோன் கேமரா உதவியுடன் யானைகள் கண்காணிப்பு

காரமடை:காரமடை அருகே ட்ரோன் கேமரா உதவியுடன், யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூர் காக்காபாளையம் பகுதியில் அண்மையில் தைலமரத் தோப்பில் மூன்று ஆண் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனை வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து, யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த 3 யானைகள் நேற்று முன் தினம் மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இதனை வனத்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்தனர். யானைகள் தொடர்ந்து அங்கேயே நேற்றும் முகாமிட்டன. வனத்துறையினரும் 2 வது நாளாக நேற்று ட்ரோன் கேமரா வாயிலாக யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். யானைகளை பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டும் தொந்தரவு செய்யக்கூடாது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி