உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு

யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு

வால்பாறை; தமிழக--கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. பருவ மழைக்கு பின் வனம் பசுமையானதால், கேரளா மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.குறிப்பாக புதுத்தோட்டம், குரங்குமுடி, அய்யர்பாடி, ேஷக்கல்முடி, புதுக்காடு, முடீஸ் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பகுதியில் அதிகாலை நேரத்தில் குட்டியுடன் வந்த யானைகள் தொழிலாளர் குடியிருப்பில் உள்ள வாழை, பலா போன்றவைகளை ருசித்தன. இதை கண்ட தொழிலாளர்கள் யானைகளை அங்கிருந்துவிரட்டினர்.அதன் பின் யானைகள் ரோட்டை கடந்து தேயிலை காட்டில் பகல் முழுவதும் முகாமிட்டன. தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகள் நடமாடும் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ