பரம்பிக்குளம் அணையில் யானை ஆனந்த குளியல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் அணையில் காட்டு யானை நீச்சல் அடித்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலானது.பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியாக உள்ள பரம்பிக்குளம் அணை, கேரள மாநிலத்துக்கு உட்பட்ட பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் உள்ளது. இதனால், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீருக்காக அணைப்பகுதியில் விசிட் அடிக்கின்றன.இந்நிலையில், பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு வந்த காட்டு யானை, திடீரென அணைக்குள் இறங்கி தண்ணீரில் நீந்தி சென்றது.ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு ஜாலியாக நீந்தியபடி சென்றது. இதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.