உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முகாமிட்ட யானைகள்; தொழிலாளர்கள் தவிப்பு

முகாமிட்ட யானைகள்; தொழிலாளர்கள் தவிப்பு

வால்பாறை; தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் முகாமிட்ட யானைகளால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர். தமிழக --- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், பருவமழைக்கு பின் கேரளாவிலிருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக, நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, முடீஸ் பகுதியில் முத்துமுடி, வாகமலை, ைஹபாரஸ்ட் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இவை பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் சிரமப்படுகின்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகள் நடமாடும் பகுதியில் சுற்றுலா பயணியர் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாமிட்டால், அந்தப்பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கக்கூடாது. இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை