லிங்காபுரத்தில் யானைகள் உலா
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக லிங்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 யானைகள் ஒரு குட்டியுடன் முகாமிட்டு பகல் நேரங்களிலேயே ஊருக்குள் உலா வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் பிற பணிகளுக்கு செல்ல அச்சமடைந்து வருகின்றனர். குழந்தைகள் மிகவும் எச்சரிக்கையுடன் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.கடந்த அக்டோபர் மாதம் இங்கு, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி விவசாயி ஒருவரை தாக்கி அவர் காயம் அடைந்தார். அதே நாளில் ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை கவ்வி சென்றது. தற்போது இந்த மாதம் யானைகள் முகாமிட்டுள்ளது, லிங்காபுரம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.-