உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குட்டிகளுடன் யானைகள் உலா

குட்டிகளுடன் யானைகள் உலா

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருகின்றன.மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையில் கடந்த சில நாட்களாக, குட்டிகளுடன் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கோத்தகிரி சாலையில் நேற்று முன் தினம் குட்டிகளுடன் யானை கூட்டம் ஒன்று உணவு தேடி சாலையை கடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர். இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், கோத்தகிரி சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். சாலையில் வனவிலங்குகளை கண்டால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தனியாகவோ கூட்டாகவோ சேர்ந்து வனவிலங்குகளை விரட்ட முயற்சிக்கக் கூடாது, என்றனர்.------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ