மேலும் செய்திகள்
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
20-Apr-2025
கோவை : கோவை மேயர் பங்களாவுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு ஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய ஒருவர், 'மாநகராட்சி மேயர் பங்களாவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது; குண்டு சிறிது நேரத்தில் வெடிக்கும்' என, தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்தார்.உஷாரான போலீசார், வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணர்களுடன், மேயர் பங்களாவுக்கு சென்று சோதனை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கவுண்டம்பாளையம் எருக் கம்பெனி தக்காளி மார்க்கெட்டை சேர்ந்த, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஆனந்த், 40 எனத் தெரிந்தது. அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், ஆனந்தின் மனைவி அண்மையில் சண்டையிட்டு விட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றதும், ஆனந்த் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. ஆனந்தை கைது செய்த போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.
20-Apr-2025