உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யணும்! பெண் குழந்தைகள் தினத்தில் விழிப்புணர்வு

மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யணும்! பெண் குழந்தைகள் தினத்தில் விழிப்புணர்வு

பொள்ளாச்சி; தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் நடத்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக நலத்துறை மற்றும் 'ஆல் தி சில்ட்ரன்' அறக்கட்டளை சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் வைஷாலி தலைமை வகித்தார். தொடர்ந்து, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இணையதளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கையாள்வது, இணையதளத்தின் வாயிலாக நடக்கும், பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பிப்பது உள்ளிட்டவை குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், வளரிளம் பருவத்தில் ஏற்படும், இயல்பான மனக்குழப்பங்களை கையாளும் முறைகள், தேர்வை எதிர்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு, மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழுவை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.சமூக நலத்துறை ஊர்நல அலுவலர்கள் சரஸ்வதி, உமா மற்றும் அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில், கிணத்துக்கடவுக்கு உட்பட்ட நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என, 27 பள்ளியில் இருந்து, 33 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரச்னையின் போது, ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய வேண்டும். பிரச்னையை எவ்வாறு கையாள வேண்டும். பேக்சோ சட்டம் குறித்து தெளிவுபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.குற்ற சம்பவத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பிரச்னைக்கு தீர்வு காணுதல், மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு செயல்பாடுகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை