உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில் முனைவர் விருது வழங்கல்

தொழில் முனைவர் விருது வழங்கல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், சிறந்த இளம் தொழில் முனைவருக்கான விருது வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், சிறந்த இளம் தொழில் முனைவருக்கான விருதினை, கோவை ஜி.டி. வெய்லர் நிர்வாக இயக்குனர் ராஜ்குமாருக்கு வழங்கினார். செயலாளர் பாலசுப்ரமணியம், சக்தி குழும தலைவர் மாணிக்கம், கே.சி.டி. நிறுவன தலைவர் சங்கர் வாணரவாயர் ஆகியோர் பேசினர். கல்லுாரியின் இயக்குனர் சர்மிளா வரவேற்றார். ரூட்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸ் இணை நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் பேசினார். கல்லுாரி பேராசிரியர் தியாகு, என்.ஜி.எம். கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை