உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்

மேட்டுப்பாளையம்;காரமடை புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கணினி உள்ளிட்ட உபகரணங்கள் சி.எஸ்.ஆர். நிதியில் வழங்கப்பட்டது. தேக்கம்பட்டியில் உள்ள ஐ.டி.சி., நிறுவனம் சார்பில் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் காரமடை புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில், 2 கணினிகள், 50 சேர்கள், யூ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இது அரசு பள்ளி மாணவர்களின் படிப்புக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ஐ.டி.சி., நிறுவன தலைமை நிர்வாகி முரளி, வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை