உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!

எர்ணாகுளம் - பாலக்காடு மெமு ரயில் பொள்ளாச்சி வரை நீட்டிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: எர்ணாகுளம்- - பாலக்காடு மெமு ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிப்பதற்கான தடை நீங்கியுள்ளது.கேரளாவில், எர்ணாகுளத்தில் இருந்து பாலக்காடு வரை (எண் 66612) மெமு ரயில் இயங்குகிறது. மாலை, 3:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், இரவு, 7:25க்கு பாலக்காடு வந்தடைகிறது.அதே போல் (எண் 66611) மெமு ரயில், காலை, 8:25 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு, மதியம், 12:30க்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. சேவை முடிந்து, பாலக்காட்டில் நிறுத்தப்படும் இந்த ரயிலை, பொள்ளாச்சி வரை இயக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.கடந்த, 2015, நவ., 16ல், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட, பாலக்காடு- - பொள்ளாச்சி (54 கி.மீ.,) பாதையில், தற்போது, பாலக்காடு - -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - -திருச்செந்துார் எக்ஸ்பிரஸ், பாலக்காடு - -சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கோரிக்கையை பரிசீலனை செய்த, ரயில்வே நிர்வாகம் சாதகமான நிலைபாடு எடுத்துள்ளது. ஆனால், மின் பிரிவுக்கும் மெக்கானிக்கல் பிரிவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இது பற்றி, நாளிதழ்களில் செய்தி வெளியானதை அடுத்து, உயர் அதிகாரிகள் தலையிட்டு தற்போது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:எர்ணாகுளம் - -பாலக்காடு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டுமானால், ரயில் எர்ணாகுளம் சென்றடையும் போது, துாய்மை பணி மற்றும் தண்ணீர் நிரப்பும் பணிகளை செய்ய வேண்டும். இதற்கு, திருவனந்தபுரம் கோட்ட மெக்கானிக்கல் பிரிவு தயாராக இல்லை.இதுதொடர்பாக, பாலக்காடு கோட்டம் அனுப்பும் கடிதங்களுக்கு, திருவனந்தபுரம் கோட்டம் தக்க பதில் வழங்குவதில்லை. தற்போது, இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.இதையடுத்து, நேற்று ரயில் துாய்மை பணிகளை செய்கிறோம் என்று, திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.தாமதமின்றி இதற்கான ஒப்பந்தம் செய்ய, மெக்கானிக்கல் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்படும். ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தம் அளிக்கப்படும் என்று திருவனந்தபுரம் கோட்ட நிர்வாகம் பதில் அளித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Vijay D Ratnam
பிப் 18, 2024 15:09

பொள்ளாச்சி வரை நீட்டிப்பதை பழனி வரை நீட்டித்தால் சிறப்பு. வருமானம் அதிகரிக்கும்ல. ரயில்வேயில் மலையாள லாபி அதிகம். தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களை கேரளா ரயில்வே கோட்டத்தில் வைத்திருப்பது ஒரு பச்சை அயோக்கியத்தனம். முதலில் தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை ரோடு, மீனாட்சிபுரம் ஆகிய மூன்று ரயில் நிலையத்தை பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்து மதுரை அல்லது சேலம் கோட்டத்திற்கு மாற்ற தமிழக எம்.பிக்கள் குரலெழுப்ப வேண்டும். அது போல திருநெல்வேலிக்கு கீழே தமிழகத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் வருமானம் கொட்டும் நாகர்கோவில், கன்னியாகுமரி உட்பட அனைத்து ரயில்நிலையங்களையும் மதுரை கோட்டத்தில் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் எந்த ஒரு ரயில்நிலையமும் கேரளா மாநில ரயில்வே கோட்டத்தில் இருக்க கூடாது.


Sivagiri
பிப் 18, 2024 12:37

என்னதான் கேரளாக்காரன் உலகமகா திருட்டு பயல்களா இருந்தாலும், கேரளாவுக்கு என்னென்ன செய்யணுமோ செஞ்சிக்கிட்டே இருக்கிறார்கள், தெற்கு ரயில்வே முழுக்க கேரளாக்காரன் கண்ட்ரோலில்தான் இருக்கு... நம்ம திருட்டு மாடல் 60-வருஷமா ஒரு வைகை எஸ்பிரெஸ் ரயிலை தாண்டி இன்னும் சிந்திக்கவே இல்லை . . .


g.s,rajan
பிப் 18, 2024 10:12

இரண்டு ரயில்களை எதிர் எதிர் திசையில் இயக்கினால் நல்லது, ஒரே ரயில் சென்று விட்டு அதே மீண்டும் திரும்பும் வகையில் இருப்பது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் .


Kasimani Baskaran
பிப் 18, 2024 05:54

அந்த 39 ம் வீணாய்ப்போனதால் தமிழகத்துக்கு வர வேண்டிய வசதிகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடும். அதாவது இரயில்வே வசதிகளை மேம்படுத்திவிட்டால் தனியார் போக்குவரத்து முடங்கிவிடும்.


kijan
பிப் 18, 2024 03:59

தென்னக இரயில்வேயிலேயே சோம்பேறி டிவிசன் என்று ஒரு அவார்டு கொடுத்தால் .... முதல் பரிசு திருவனந்தபுரம் டிவிசனுக்குதான் ..... அவர்களுக்கு போட்டியே இல்லை ..... இந்த டிவிசனில் அதிகபட்ச வேகம் 90கி.மி தான் .... ரயில்களில் முன்பதிவு மற்றும் ஏ.சி. சேர் கார்களை அதிகப்படுத்த மாட்டார்கள் .... அன்-ரிசர்வ்டு பெட்டிகளில் சோதனை செய்ய வேண்டாம் .... திருச்சி-திருவனந்தபுரம்-குருவாயூர் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ...திருச்சியிலிருந்து கிளம்பும்போது மட்டுமே சுத்தமாக இருக்கும் .... கேரளாவில் கிளீனிங் அறவே கிடையாது .... ஒரே ஒரு ஏ.சி பெட்டி தான் ... அதிகப்படுத்தினால் டிக்கெட் செக் செய்யவேண்டுமே .... ஒரு என்கொயரிக்கும் பதிலே அனுப்ப மாட்டார்கள் ....


சமீபத்திய செய்தி