உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செங்காட்டு மாரியம்மன் கோவில் ஸ்தாபன பூஜை

செங்காட்டு மாரியம்மன் கோவில் ஸ்தாபன பூஜை

உடுமலை : உடுமலை, பள்ளபாளையம், ஸ்ரீ செங்காட்டு மாரியம்மன் கோவில் மூலவர் எந்திரம், தைல கலயம் ஸ்தாபன பூஜை, இன்று (20ம் தேதி) நடக்கிறது.உடுமலை, பள்ளபாளையம் செங்காட்டு மாரியம்மன் கோவிலில், அத்திக்கட்டையில் அழகு வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்மனுக்கு, சிற்ப சாஸ்திர முறைப்படி, கற்கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், கற்கோவில் நிர்மாணம் செய்யும் பண்டைய விதிகளின் படி, கோவில் கருவறை அமையவுள்ள அம்பிகை பீடத்துக்கு நேர் கீழாக, சக்தி பிரவாக ஊற்றின் மேல் பகுதியில், கூர்மாசன பீடத்தில் மூலவர் எந்திரமும், தைல கலயமும் ஸ்தாபிக்கும் பூஜை, இன்று (20ம் தேதி) காலை, 10:05 மணிக்கு நடக்கிறது. இதில், பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெறுமாறு, கோவில் திருப்பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை