உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல்; தி.மு.க.,வை வீழ்த்திய அ.தி.மு.க.,

எஸ்டேட் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல்; தி.மு.க.,வை வீழ்த்திய அ.தி.மு.க.,

வால்பாறை; தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில், அ.தி.மு.க., 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.வால்பாறையில், தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்களில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள முடீஸ் பி.பி.டி.சி., எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு டிவிஷன்களில் தொழிலாளர் பிரதிநிதி தேர்தல் நடந்தது.மொத்தம் உள்ள, 10 தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.போட்டியின் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் 9 பேர் வெற்றி பெற்றனர். ஒரு இடத்தில் மட்டும் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார்.இதே போல், உருளிக்கல் எஸ்டேட் (டாடா) பகுதி தொழிலாளர் பிரதிநிதியாக அ.தி.மு.க.,வை சேர்ந்த மாரிமுத்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். தொழிலாளர் பிரதிநிதி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு, வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள ஏ.டி.பி., தொழிற்சங்க அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது பேசும் போது, ''தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். எஸ்டேட் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக தொழிலாளர் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். அதே நேரம் தொழிலாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்,'' என்றார்.விழாவில், பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை