| ADDED : நவ 24, 2025 06:05 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடசித்தூரில் அரசு பள்ளி அருகே குப்பை கொட்டாதீர்கள் என, எச்சரிக்கை அறிவிப்பு வைத்தாலும், குப்பை கொட்டுகின்றனர். கிணத்துக்கடவு, வடசித்தூர் --- நெகமம் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே, 'குப்பை கொட்டாதீர்கள்' என ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை மதிக்காத மக்கள் சிலர், பள்ளி சுவர் அருகே குப்பை கொட்டிச்செல்கின்றனர். இது மட்டுமின்றி அவ்வப்போது குப்பைக்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இத்துடன் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இப்பகுதியில் குப்பை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.