உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாலை நேர வகுப்பு துவக்கம்

 மாலை நேர வகுப்பு துவக்கம்

மேட்டுப்பாளையம்: காந்தவயலில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாலை நேர வகுப்பு துவங்கப்பட்டது. சிறுமுகையை அடுத்த காந்தவயலில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு காந்தவயல், உளியூர், காந்தையூர், மேலூர் ஆகிய மலைவாழ் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, நீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில், மாலை நேர டியூசன் வகுப்பு இலவசமாக சொல்லிக் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். நிர்வாகிகள் மருதாசலம், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை