உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலையில் உயர்ந்தது எவரெஸ்ட்; வாழ்வில் உயர நெவர் ரெஸ்ட்

மலையில் உயர்ந்தது எவரெஸ்ட்; வாழ்வில் உயர நெவர் ரெஸ்ட்

கோவை; சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், 35வது முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நடந்தது. சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், '' மலையில் உயர்ந்தது எவரெஸ்ட், வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் 'நெவர் ரெஸ்ட்'. விடாமுயற்சி நிச்சயம் வெற்றியை தேடி தரும். தன்னம்பிக்கையும், குறிக்கோளும், திறமையும் உடையவர்களே உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்,'' என்றார்.கல்லுாரியின் துணை இணைச் செயலர் நித்யா, இணைச் செயலர் சந்தியா, அறங்காவலர் பட்டாபிராமன், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை