உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் விமானப்படை வீரர் உடல் அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானம்

முன்னாள் விமானப்படை வீரர் உடல் அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானம்

கோவை : முன்னாள் விமானப்படை வீரர் உடல், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்., ரோடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 75; இவர் இந்திய ராணுவத்தில் விமானப்படையில், 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு மோகன்குமார் என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர். மோகன்குமார் ஹோமியோ டாக்டராக பணிபுரிந்து வருகிறார். பூர்ணிமா வெளிநாட்டில் வசித்து வருகிறார். ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன், தனது உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக, தானமாக வழங்குவதாக பதிவு செய்தார்.இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ராதாகிருஷ்ணனின் உடலை, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ஒப்படைக்க முடிவு செய்தனர்.அவரது உடல், தனியார் மருத்துவமனையில் எம்பார்மிங் முறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மகள் பூர்ணிமா வந்ததும், ராதாகிருஷ்ணனின் உடல் கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை