மேலும் செய்திகள்
வழுக்கி விழுந்த மூதாட்டி சாவு
20-Dec-2024
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, புளியகுளத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் செந்தில்குமார்,60. இவர், மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம், உடுமலையில் உள்ள தோட்டதுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் கோவைக்கு சென்றார். பொள்ளாச்சி - கோவை ரோட்டில், ஆச்சிப்பட்டி அருகே சென்ற போது, திடீரென கார் கவிழ்ந்தது. விபத்தில், தலையில் படுகாயமடைந்த அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
20-Dec-2024