உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இமேட் கருவி  நிறுவ  எதிர்பார்ப்பு 

இமேட் கருவி  நிறுவ  எதிர்பார்ப்பு 

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் கறவை மாடு வளர்ப்போர், 'ஆவின்' மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, பால் வழங்குகின்றனர். நேரடியாகவும் பால் விற்பனையில் ஈடுபடுகின்றனர். ஆனால், பொதுமக்களால், பாலின் தரம் மற்றும் எடை உறுதிபடுத்தப்படுவதில்லை.பாலின், தரம் மற்றும் எடையளவு குறைவதால், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். கலப்பட பாலை உட்கொள்வதால், நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, அதிகளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களில், 'இமேட்' எனப்படும் 'எலக்ட்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட்' கருவி வைக்க, உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் வாயிலாக, நுகர்வோர் இலவசமாக பாலின் தரத்தை பரிசோதிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ