உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆரம்ப சுகாதார நிலையங்களில் காவலர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காவலர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி; சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காவலர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 2 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள்; தெற்கு ஒன்றியத்தில், ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 3 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.தினமும், வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தை பொறுத்தமட்டில், 300 புறநோயாளிகளும்; கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 150 புறநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர, கர்ப்பிணிகள், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், சுழற்சி முறையில் இரவு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், இங்கு, பாதுகாப்புக்காக காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:ஆரம்ப சுகாதார நிலையங்களில், தடுப்பூசி, கர்ப்பகால பராமரிப்பு, நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் காவலர்கள் நியமிக்கப்படுவதன் வாயிலாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும்.தேவையற்ற நபர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுக்க முடியும். அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, இதற்கு, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி