உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாய்ந்த நிலையில் மின்கம்பம் மாற்றியமைக்க எதிர்பார்ப்பு

சாய்ந்த நிலையில் மின்கம்பம் மாற்றியமைக்க எதிர்பார்ப்பு

வால்பாறை : வால்பாறை அருகே, மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதால், எஸ்டேட் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ள வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பயணியர் நிழற்கூரையை ஒட்டி, மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு வசதிக்காக அமைக்கப்பட்ட மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் மின் கம்பம் விழுமோ என்ற அச்ச நிலை உள்ளது.தொழிலாளர்கள் கூறுகையில், 'பயணியர் நிழற்கூரை ஒட்டி உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதால், இப்பகுதி மக்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் மின் கம்பம் விழும் வாய்ப்புள்ளது.இதனால் மின் கம்பம் அமைந்துள்ள பகுதி வழியாக, யாரும் நடந்து செல்வதில்லை. மின் கம்பம் சாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், மாற்றியமைக்க மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை