உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் விரைவு தபால் சேவை இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு

கோவையில் விரைவு தபால் சேவை இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு

கோவை; கோவையில், விரைவு தபால் சேவை துவங்கி, இன்றுடன் 38 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில், கோடிக்கணக்கான கடிதங்கள் கையாளப்படுவதில், தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், சில கடிதங்கள் தாமதமாகி வந்தன. இதை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு, தபால் துறை வாயிலாக அறிமுகப்படுத்திய சேவையே விரைவு தபால். அதன்படி, 1986 ஆக., முதல் தேதி எக்ஸ்பிரஸ் மெயில் சேவை துவங்கப்பட்டது. துவக்கத்தில், இந்தியாவில் மும்பை, கோல்கட்டா உட்பட 14 நகரங்களில் மட்டும், அமெரிக்கா, லண்டன் உட்பட ஏழு வெளிநாடுகளுக்கு ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை, தற்போது பரவலாக்கப்பட்டுள்ளது. கோவையில் விரைவு தபால் சேவை, 1987 செப்., 15ல், மூன்று தபால்களுடன், கூட்ஸ் ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் துவங்கப்பட்டது. மூன்று விரைவு தபால்களை, அப்போதைய மேற்கு மண்டல தபால் துறை இயக்குனர் கோவிந்தராஜன், தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் பாலகுரு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தற்போது, தபால் துறை, ஒரு லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் வாயிலாக தபால்களை சேகரித்து பட்டுவாடா பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவையில் விரைவு தபால் சேவை துவங்கி, இன்றுடன் 38 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது, தபால் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை