உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை நீட்டிப்பு

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை நீட்டிப்பு

வால்பாறை : அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், இருமாநில சுற்றுலா பயணியர் கவலையடைந்துள்ளனர்.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.கேரளாவில் கடந்த நான்கு மாதங்களாக, தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்தது. இதனால் இங்குள்ள அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.இது குறித்து, கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கேரளாவில் தென்மேற்குப்பருவ மழைக்கு பின் வடகிழக்குப்பருவ மழை துவங்கியுள்ளதாலும், நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து குறையாமல் உள்ளதாலும் சுற்றுலாபயணியர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதியில்லை. ஆனால் நீர்வீழ்ச்சியை வெளியில் நின்றபடி கண்டு ரசிக்கலாம். நீர்வரத்து குறைந்த பின், அவர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை