உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தியை காண்பித்து மிரட்டி பணம் பறிப்பு

கத்தியை காண்பித்து மிரட்டி பணம் பறிப்பு

கோவை: வெங்கிடாபுரத்தை சேர்ந்தவர் பாபு, 53; பெயின்டர். நேற்று முன்தினம் தனது நண்பர் அசோக் உடன் பைக்கில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியில் கொண்டிருந்த போது, அவருக்கு தெரிந்த கோவை வெங்கிடாபுரத்தை சேர்ந்த மனோஜ்குமார், 24 மற்றும் அவரது நண்பர் கார்த்திக், 23 ஆகியோர், பாபுவை வழிமறித்தார். தீபாவளிக்கு பணம் கொடுக்குமாறு கேட்டனர். பாபு மறுத்தார். ஆத்திரமடைந்த மனோஜ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாபுவை மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.1,000 பறித்தார். பாபுவின் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் அங்கு வந்தனர். கார்த்திக்கும் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பினர். புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து, மனோஜ்குமாரை சிறையில் அடைத்தனர். தப்பிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !