உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் சிகிச்சை முகாம் 3,550 பேர் பயன்

கண் சிகிச்சை முகாம் 3,550 பேர் பயன்

கோவை; பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கோவை மாவட்டத்தில் மதுக்கரை, தொண்டாமுத்துார், நெகமம், காரமடை, சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, வால்பாறை, பெரிய நாயக்கன்பாளையம், அன்னுார் ஆகிய வட்டாரங்களில், இதுவரை, 18 சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தியுள்ளன.அதில், 3,550 பயனாளிகள் பயனடைந்தனர். 204 கண்புரை உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, 139 பயனாளிகளுக்கு கோவை அருசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மீதமுள்ள, 65 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இம்முகாம்களில், 496 பார்வை குறைபாடுள்ள வயதானவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில், 50 பேருக்கு ரோட்டரி கிளப் உதவியுடன், கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை