உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குன்னத்தூரில் இன்று கண் சிகிச்சை முகாம்

குன்னத்தூரில் இன்று கண் சிகிச்சை முகாம்

அன்னுார் ; குன்னத்தூரில் இன்று (18ம் தேதி) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், குன்னத்தூர், சமுதாய நலக் கூடத்தில் இன்று (18ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், நாரணாபுரம், குன்னத்தூர் ஊராட்சிகளை சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். இதில் பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், கண் புரை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். இலவசமாக மருந்து வழங்கப்படும். 'தேர்வு செய்யப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்யப்படும்,' என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை