உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலி பங்கு சந்தை செயலி : ரூ.59 லட்சம் மோசடி 

போலி பங்கு சந்தை செயலி : ரூ.59 லட்சம் மோசடி 

கோவை; பந்து சந்தை முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி, ரூ. 59 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, தடாகம் சாலை, ஜி.சி.டி., பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் பழனிசாமி, 53; தனியார் நிறுவன ஊழியர். இவரின் மொபைல் போனுக்கு, பங்கு சந்தை முதலீடு குறித்து வந்த விளம்பரத்தில், தங்கள் நிறுவனத்தின் மூலம், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிட்டிருந்தது.செல்வகுமார் அந்த 'லிங்க்'ஐ கிளிக் செய்து, 'ஆக்ஸிஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குரூப்' என்ற 'வாட்ஸ் அப்' குழுவில் சேர்ந்தார். இதன் பின், செல்வகுமாரை தொடர்பு கொண்ட அக்குழுவின் 'அட்மின்', ஆக்ஸிஸ் செக்யூரிட்டி லிமிடெட்' என்ற 'ஆப்'க்கான லிங்கை அனுப்பினார். இதன் வாயிலாக தாங்கள் கூறும் வகையில், டிரேடிங் செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினார்.இதை நம்பிய செல்வகுமார், கடந்த நவ., 5ம் தேதி இந்த 'ஆப்' ஐ பதிவிறக்கம் செய்து முதலீடு செய்ய துவங்கினார். பல்வேறு தவணைகளாக ரூ.59 லட்சத்து 93 ஆயிரம் பணத்தை முதலீடு செய்தார். பின்னர், பணத்தை எடுக்க முயற்சித்தும் முடியவில்லை. 'ஆப்' லிங்க் அனுப்பிய நபரிடம் கேட்டபோது, அவர் மேலும் பணம் கேட்டுள்ளார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வகுமார், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ