மேலும் செய்திகள்
கவிழ்ந்த லாரி; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
26-Jul-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே, கொளப்பள்ளி சாலையில், மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பந்தலுாரில் இருந்து கொளப்பள்ளி வழியாக, தமிழக எல்லை பகுதியான, நம்பியார்குன்னு மற்றும் கேரளா வயநாடு பகுதிக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கொளப்பள்ளி அருகே, ஏலமன்னா என்ற இடத்தில் சாலையோரம் இருந்த கற்பூர மரம் அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் இருந்து கொளப்பள்ளி மற்றும் தமிழக எல்லை பகுதிகள், வயநாடு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து, மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், தமிழகம்- கேரளா இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26-Jul-2025