உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிலத்தகராறில் விவசாயி குத்திக்கொலை

நிலத்தகராறில் விவசாயி குத்திக்கொலை

சூலுார்; சுல்தான்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி, குத்திக்கொலை செய்யப்பட்டார்.சுல்தான்பேட்டை அடுத்த மலைப்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி, 52. விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணப்பன், 50 என்பவருக்கும் நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமலைசாமி நிலத்தில் சர்வே செய்யும் பணி நேற்று மதியம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, திருமலை சாமி, சாந்தகுமார், 32, பாலபிரசாத், 40 ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த கண்ணப்பன், திருமலைசாமியுடன் வாக்குவாதம் செய்து, தான் வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவரால் , கழுத்தில் குத்தியுள்ளார். தடுக்க முயன்ற இருவரையும் தாக்கி தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பல்லடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திருமலைச்சாமி உயிரிழந்தார். சுல்தான் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை