மேலும் செய்திகள்
நொய்யலை மீட்டெடுக்க 13ம் தேதி உண்ணாவிரதம்
08-Jul-2025
சோமனூர்; நொய்யல் ஆற்றை சீரமைக்க, முதல்வர் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்று நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக இருந்த நொய்யல் ஆறு , தற்போது, கழிவு நீர், கட்டட கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்துள்ளது.விவசாயிகள், பொதுமக்கள் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை சங்கம் சார்பில் நடத்தியும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.திருப்பூருக்கு வரும் முதல்வர், நொய்யல் ஆற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஆற்றை புனரமைக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.எங்களின் கோரிக்கையை முதல்வரிடம் நேரில் வலியுறுத்த, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
08-Jul-2025