உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நொய்யல் ஆற்றை பாதுகாக்க போராட்டம்; பொதுமக்களுடன் இணைந்து நடத்த விவசாயிகள் முடிவு

நொய்யல் ஆற்றை பாதுகாக்க போராட்டம்; பொதுமக்களுடன் இணைந்து நடத்த விவசாயிகள் முடிவு

கோவை; ''நொய்யல் ஆற்றை பாதுகாக்க, பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் தெரிவித்தார்.கோவை, ஆத்துப்பாலம் பகுதியில், நொய்யல் ஆறு செல்லும் பகுதியை பார்வையிட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம், பிரச்னையை கேட்டறிந்தார். ஒவ்வொரு கட்சியினரும், அரசு அதிகாரிகளும் பலமுறை இங்கு வந்து பார்வையிட்டுச் செல்வதாகவும், நடவடிக்கை இல்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.பின், பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:நொய்யல் ஆறே, கோவை நகரின் அழகாக இருக்கிறது. 300 அடி அகலம் கொண்டிருந்த இந்த ஆறு, தற்போது 50 அடி அகலம் கொண்ட கழிவு நீர் கால்வாயாக மாறியிருக்கிறது. ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, சிறப்பு பெருந்திட்டத்தை, தொழிலதிபர்கள் பங்களிப்புடன், தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.அரசு, பெருநிறுவனங்களுடன் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்கக்கோரி, கோவை மக்கள் பங்களிப்போடு விரைவில் போராட்டம் நடத்தப்படும். நாளை (இன்று), தமிழக விவசாயிகள் மகாசபை கூட்டம், பேரூரில் நடக்கிறது; அதில், போராட்டம் நடத்துவதற்கான முடிவுகளை எடுக்க இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாபு, சமூக ஆர்வலர் சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram pollachi
ஜூலை 05, 2025 15:37

வருங்காலத்தில் விவசாயி என்று சொல்லிக் கொள்ள ஆட்களே இருக்க மாட்டார்கள்.... நிலவரம் அப்படி இருக்கு அப்புச்சி.


அப்பாவி
ஜூலை 05, 2025 11:32

போராட்டம்னு வைத்து கோஷம் போடாம தினமும் கொஞ்சம் கொஞ்சமா குப்பையை அகற்றி சுத்தம் செய்யுங்க. தத்தி விடியல் அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. முயற்சி தன் மெய் வருத்த கூலிதரும். எவன் ஆட்சிக்கு வந்தாலும் பெப்பேதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை