உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைவாழ் விவசாயிகளுக்கு உழவர் முன்னேற்றத்திட்டம்

மலைவாழ் விவசாயிகளுக்கு உழவர் முன்னேற்றத்திட்டம்

மேட்டுப்பாளையம்; மலைவாழ் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் தரும் மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம் காரமடையில் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், கிருஷ்ணவேணி கூறியதாவது:- ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற குறு தானியங்கள் ஆகியவற்றின் சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் மலைவாழ் உழவர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அதிக விளைச்சல் தரக்கூடிய, புதிய சிறுதானிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே அறிமுகம் செய்து, சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நிலையான வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகும். இத்திட்டத்தின் கீழ் குறுதானிய சாகுபடிக்கு பின்னேற்பு மானியம் ரூ.4,000 ஒரு ஹெக்டர் மற்றும் 4 கிலோ குறுதானிய விதை ஒரு ஏக்கருக்கு 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !