கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பெ.நா.பாளையம்: கோவை வடக்கு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இம்மாதம், 28ம் தேதி பிற்பகல், 3:00 மணிக்கு கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், கலந்து கொள்ள கோவை மாநகராட்சி அதிகாரிகள், வேளாண் விற்பனை குழு தனி அலுவலர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை பிரிவு துணை இயக்குனர், புள்ளியியல் துறை, கால்நடை பராமரிப்பு, மேட்டுப்பாளையம், அன்னூர், கோவை வடக்கு தாசில்தார்கள், மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர் நகராட்சி ஆணையாளர்கள், உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவலை கோவை வடக்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.