உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீரோடையை தூர்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

நீரோடையை தூர்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, பட்டணம் பகுதியில் உள்ள நீரோடையை தூய்மைப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில் இருந்து, பட்டணம் செல்லும் ரோட்டில் நீரோடை உள்ளது. இந்த நீரோடையில் அதிகளவு செடிகள் மற்றும் முள் மரம் போன்றவைகள் முளைத்து வளர்ந்து உள்ளது. இதனால், நீரோடையில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.கோடை காலம் துவங்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. எனவே, விவசாயிகள் நலன் கருதி இந்த நீரோடையில் உள்ள செடிகள் மற்றும் முள் மரங்களை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.விரைவில் சுத்தம் செய்யும் பட்சத்தில், நீரோடையில் மழை நீரை சேமித்து அப்பகுதி விவசாய விளைநிலங்களுக்கு உபயோகப்படுத்த முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது, என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி