உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மைவாடி ஊராட்சியில் போராட்டம்

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மைவாடி ஊராட்சியில் போராட்டம்

மடத்துக்குளம்; வீடு கட்ட அனுமதி வழங்காமல் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் இழுத்தடிப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மைவாடியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சிக்குட்பட்ட செட்டியார் மில் பகுதியில், அப்பகுதியைச்சேர்ந்த கேசவன், வீடு கட்ட அனுமதி கேட்டு, ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.ஆனால், அனுமதி வழங்காமல், உரிய பதிலும் வழங்காமல், மைவாடி ஊராட்சி மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய நிர்வாகத்தினர் இழுத்தடித்துள்ளனர்.இதைக்கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், மைவாடி ஊராட்சி அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் போலீசார், ஒன்றிய மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டத்தை கைவிட்டனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது: வீடு கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்தும், அலைக்கழித்து வருகின்றனர். போராட்டத்துக்கு பிறகான பேச்சுவார்த்தையில், அப்பகுதியில், செயல்படாத கல் குவாரி உள்ளதால், கட்டட வரைபட அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.செயல்படாத கல் குவாரிக்கு ஆதரவாக, அனைத்துத்துறை அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !