விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சோமனுார்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சோமனுாரில் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.சோமனூர் ரயில்வே ஸ்டேஷன் முன் விவசாயிகள் திரண்டனர். ரயில் மறியல் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினர். விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என, கோஷங்களை எழுப்பினர்.