மேலும் செய்திகள்
விலை உயர்வை எதிர்பார்த்து கொப்பரை இருப்பு வைப்பு
09-Sep-2024
நெகமம் : நெகமம் மற்றும் சுற்று பகுதிகளில் பெரும்பாலும் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள் உள்ளது. இப்பகுதி விவசாயிகள் பலர் தங்கள் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து விலை அதிகரித்தவுடன் விற்பனை செய்கின்றனர்.ஒரு கிலோ கொப்பரை, 128 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தற்போது விற்பனை கூடத்தில், 46 விவசாயிகள், 5 ஆயிரம் மூட்டைகள் (50 கிலோ) விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்வதற்காக இருப்பு வைத்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ கொப்பரை அதிகபட்சமாக 145க்கு விற்பனை ஆனது.மேலும், நெகமம் சுற்று வட்டார விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை கூடத்தின் வாயிலாக விற்பனை செய்து பயன்பெற வேண்டும். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
09-Sep-2024