பணப்பயிர்கள் பயிரிட துவங்கிய விவசாயிகள்
- நமது நிருபர் -: அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டால், திருப்பூர் ஒன்றிய வடக்கு பகுதியில், 1200 அடி வரை சரிந்திருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது உயர்ந்து, நுாறு அடியிலேயே தண்ணீர் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாழை, மஞ்சள், நெல் உள்ளிட்ட பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தால், கிராமங்களில் உள்ள அனைத்து குளங்களும் தண்ணீர் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது, விவசாயிகள் வாழை, மஞ்சள், வெங்காயம், சோளம், கம்பு என அனைத்து பயிர்களையும் பயிரிடத் துவங்கியுள்ளனர். நெல் சாகுபடியும் நடக்கிறது.