உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண் காட்டு யானை இறப்பு; சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

பெண் காட்டு யானை இறப்பு; சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

வால்பாறை; வால்பாறை அருகே யானை மர்மான முறையில் இறந்துள்ளதால், சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ள, மானாம்பள்ளி கெஸ்ட் ஹவுஸ் அருகே, சிற்றோடையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உடலில் பல இடங்களில் காயங்களுடன் பெண் யானை இறந்த நிலையில் காணப்பட்டது. மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் இறந்த யானையை பார்வையிட்டனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இறந்த பெண் யானை இன சேர்க்கையின் போது, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டு இறந்துள்ளது. இறந்த பெண் யானைக்கு, நாளை (இன்று 14ம் தேதி) வனக்கால்நடை அதிகாரி சுகுமார், வனகால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் விஜயராகவன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்கின்றனர்,' என்றனர்.மானாம்பள்ளி வனச்சரகத்தில் கடந்த இரண்டு மாதத்தில், மூன்று யானைகள் இறந்ததால், சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ