உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீட்டு பணம் திருப்பி தராத நிதி நிறுவன அதிபர் கைது

சீட்டு பணம் திருப்பி தராத நிதி நிறுவன அதிபர் கைது

அன்னுார்; கோவை, பன்னிமடையைச் சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து, 31. ஆட்டோமொபைல் கடை வைத்துள்ளார். இவர் அன்னுாரில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார். சீட்டு முடிந்த பிறகும் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து மாரிமுத்து கோவை மாவட்ட போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அன்னுார் போலீசார், சிட்பண்ட் உரிமையாளரான அன்னுாரைச் சேர்ந்த ராஜேந்திரன், 44. என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !