போலி மாத்திரை தயாரித்த நிறுவனத்துக்கு அபராதம்
கோவை; கோவை, கோவில்பாளையத்திலுள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில், 2018, ஏப்., 12ல் கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலக ஆய்வாளர் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது, கண் மற்றும் தோல்நோய்க்கு பயன்படுத்தப்படும், மெட்லோன்-4 என்ற மாத்திரையை கைப்பற்றி பரிசோதித்த போது, போலி என்பது தெரிய வந்தது.இந்த மாத்திரை இமாச்சல பிரதேச மாநிலம், சோலன் என்ற இடத்தில் செயல்பட்ட ஜே.எம்.லேபரட்டரி என்ற நிறுவனம் தயாரித்து, சப்ளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.இது தொடர்பாக, அந்நிறுவன இயக்குநர் சந்தீப் ஷர்மா மீது, கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், குற்றம் சாட்டப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவன இயக்குநர் சந்தீப்ஷர்மாவுக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.