உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறந்த கோழிகளை வீசியதற்கு அபராதம்

இறந்த கோழிகளை வீசியதற்கு அபராதம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சரக்கு வாகனத்தில் இறந்த கோழியை கொண்டு வந்ததற்கு, போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.மடத்துக்குளம் அருகே வயலுாரில் இருந்து, கேரளாவுக்கு கோழிகள் ஏற்றி கொண்டு வாகனம் சென்றது. அதன்பின், கேரளாவில் இருந்து, 10 இறந்த கோழிகளை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி வழியாக வயலுார் நோக்கி வாகனம் வந்தது.அப்போது, கோலார்பட்டி சுங்கம் அருகே, இறந்த கோழிகளை வீசினர். அவ்வழியாக சென்றவர்கள் தெரிவித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோமங்கலம் போலீசார், சரக்கு வாகனத்தை பிடித்து, ரோட்டோரத்தில் வீசப்பட்ட கோழிகளை எடுக்க கூறியதுடன், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.கோமங்கலம்புதுார் ஊராட்சியும், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், இதுபோன்று செயலில் மீண்டும் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து வாகனத்தை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி