ஆளில்லாத வீட்டில் தீ விபத்து
சூலுார்; சூலுார் கந்தசாமி பிள்ளை வீதியில் தேவன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவர் எட்டு மாதத்துக்கு முன் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்றார். வீடு காலியாக இருந்தது. நேற்று மதியம் வீட்டில் இருந்து புகை வெளியேறியது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள், விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தால் வீட்டின் மேற்கூரை, பழைய பொருட்கள் சேதமடைந்தன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.