முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்துஸ்தானில் உற்சாக வரவேற்பு
கோவை; நவஇந்தியா, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டு இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மரபின் மைந்தன் முத்தையா பேசுகையில், '' கல்வியே மாணவர்களை உயர்த்தும். மாணவர்களுடைய கவனம் முற்றிலும் படிப்பின் மீது இருக்க வேண்டும். போதை போன்ற தீய பழக்கங்களில் சிக்கிவிடக்கூடாது. கல்லுாரி காலத்தில், கல்வியுடன் பல்வேறு திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.கல்லுாரி செயலர் சரஸ்வதி, நிர்வாக செயலர் பிரியா, சேர்க்கை இயக்குனர் ஜெயலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.