உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் கண்ணாடி உடைத்து  தாக்கிய ஐந்து பேர் கைது 

கார் கண்ணாடி உடைத்து  தாக்கிய ஐந்து பேர் கைது 

கோவை; புலியகுளம், மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜெரோம் அற்புதராஜ், 25; கார் டிரைவர். கடந்த 1ம் தேதி உக்கடம், ஜி.எம்.நகரில் நவுஷாத் என்பவருக்கு, சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தனது நண்பர் சுதாகரனுடன் புலியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, உக்கடம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த, இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் தங்களின் நண்பர்களை அழைத்துக்கொண்டு, காரை பின்தொடர்ந்து சென்றனர். கார் வாலாங்குளம் அருகில் சென்ற போது, காரை வழிமறித்தனர். காரில் இருந்து இறங்கிய ஜெரோமை, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். தடுக்க வந்த அவரது நண்பர் சுதாகரையும் தாக்கினர். கார் கண்ணாடியை உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்சம்பவம் குறித்து ஜெரோம், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளைஞர்களை தாக்கியது, உக்கடம், கோட்டைமேட்டை சேர்ந்த ருசீது, 23, ஜாபர் சாதிக், 22, அன்பு நகரை சேர்ந்த முகமது ஆசிப், 20, முகமது முஷாமில், 20, கிரீன் கார்டன், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமது நஸ்ருதீன், 21 என்பது தெரிய வந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dhinesh Kumar
ஏப் 04, 2025 16:47

இதே போல் சம்பவம் எனக்கும் நடந்துள்ளது. உக்கடம் பஸ்ஸ்டாண்ட் முதல் ஆற்றுப்பாலம் வரை பைக் இல் வந்து கார்களை உரசி செல்லுமாறு ஓட்டுவார்கள். நாம் எதாவது சொன்னால் வம்புக்கு வருவார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 03, 2025 09:35

அமைதி மார்க்கமாம்... நம்பிடுங்க... நானும் நம்பிட்டேன் ........