உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னுாரில் அகற்றப்படாத கொடி கம்பங்கள்

அன்னுாரில் அகற்றப்படாத கொடி கம்பங்கள்

அன்னுார்: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அன்னுார் வட்டாரத்தில், கொடிக் கம்பங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை. அரசியல் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளின் கொடி கம்பங்களால் பிரச்சனை ஏற்படுகிறது, என்று கூறி, சமூக ஆர்வலர்கள் சிலர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஜனவரியில் பிறப்பித்த உத்தரவில், 'பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்,' என உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிடம், உடனடியாக கொடி கம்பங்களை அகற்றும்படி கூறியது.அன்னுார் வட்டாரத்தில், வடவள்ளி ஊராட்சியில் பெரியபுத்தூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் பொன்னே கவுண்டன் புதூர், குன்னத்தூர் ஊராட்சியில் கணேசபுரம் உள்பட சில ஊராட்சிகளில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. அன்னுார் நகரிலும் ஒரு சில இடங்களில் கொடிகள் அகற்றப்படவில்லை.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'உயர் நீதிமன்ற உத்தரவை உள்ளாட்சி அமைப்புகள் முழுமை யாக செயல்படுத்தாமல் உள்ளன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி