உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியர் செல்ல தடை

கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணியர் செல்ல தடை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதால், கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு மற்றும் வால்பாறை பகுதிக்கு, அதிகப்படியான சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவி, தண்ணீர் வரத்து இல்லாததால், கடந்த பிப்., மாதம் மூடப்பட்டது.'கோடை மழை பெய்தால், அருவியில் நீர்வரத்து இருக்கும்,' என, காத்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழை பொய்த்து, கடும் வெயில் காரணமாக, அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாதிருந்தது.இந்நிலையில், கடந்த இரு தினங்களாக, மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், கவியருவியில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி, சுற்றுலாப்பயணிகளுக்கு மீண்டும் அருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டதால், பலரும் அங்கு வந்து ஏமாற்றத்துடனும் திரும்பிச்செல்கின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலாப்பயணியர் அருவிக்குச் செல்லவும், குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ