மேலும் செய்திகள்
பூண்டி வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு
12-Oct-2025
தொண்டாமுத்தூர்: தொடர் கனமழையால், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நீர்வீழ்ச்சியில் குளிக்காமல், பார்வையிட மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால், சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சி வரை சென்று பார்வையிட மட்டும் அனுமதியளித்துள்ளதாக, போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
12-Oct-2025