மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகைக்காக செண்டுமல்லி பூ அறுவடை
02-Sep-2025
கோவை; ஓணம் பண்டிகை முடிந்ததால், உதிரிப்பூக்கள் விலை சரிந்துள்ளது. கோவை பூமார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் 10 முதல் 12 டன் வரை உதிரிப்பூக்கள் விற்பனைக்கு வருகிறது. ஓணம் பண்டிகைக்கு தமிழகம் மட்டும் இல்லாமல், கேரளாவுக்கும் கோவையில் இருந்துதான் அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 10 நாட்களாக உதிரிப்பூக்கள் விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ மல்லி, 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அரளி, 300 மற்றும் 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஓணம் பண்டிகை முடிந்ததால், உதிரிப்பூக்கள் விலை சரிந்துள்ளது. கோவை பூமார்க்கெட்டில் மல்லி கிலோ, 350 ரூபாய்க்கும், முல்லை கிலோ, 200 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ, 100 ரூபாய்க்கும் அரளி, சம்பங்கி, கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. பூமார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், 'இனி நவராத்திரி பண்டிகை வரை பூ விலை உயராது. புரட்டாசியில் முகூர்த்தம் இருக்காது. தேய்பிறை வேறு துவக்கி விட்டதால், பூ விலையில் ஏற்றம் இருக்காது. அடுத்து ஆயுதபூஜை வந்தால் விலை கூடும்' என்றனர்.
02-Sep-2025